
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதலே என்ஐஏ அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டுள்ளனர். அதாவது பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஷாப் உத் தஹீரிர் என்ற அமைப்புக்கு சட்டவிரோதமாக ஆள்சேர்ப்பு நடத்தியது குறித்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி சென்னை, தாம்பரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் சோதனையானது நடைபெறுகிறது. மேலும் சென்னையில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.