
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் வழக்கில் 28 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு 29 வது நபராக நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து ரவுடி சீசிங் ராஜா கைது செய்யப்பட்டார். இவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட சீசிங் ராஜாவை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர். அதன் பிறகு அவர் இன்று சென்னை நீலாங்கரை பகுதியில் வைத்து என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதாவது காவல்துறையினரை தாக்கி விட்டு தப்பி ஓடிஏ முயன்றதால் வரை சுட்டுக்கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் கொல்லப்படுவதற்கு முன்பாக அவருடைய மனைவி கையில் குழந்தையுடன் வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் என்னுடைய கணவருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எங்களுக்கு திருமணம் ஆக இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில் குழந்தை பிறந்து ஒன்றரை மாதங்கள் ஆகிறது. என் கணவர் 2 வருடங்களாக எந்த பிரச்சனைக்கும் செல்லவில்லை. நாங்கள் அமைதியான முறையில் தான் வாழ்ந்து வருகிறோம். குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் மருந்து வாங்குவதற்காக சென்று அவரை காவல்துறையினர் கைது செய்து விட்டதாக கூறுகிறார்கள். அவரைப் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்ல திட்டமிட்டுள்ளனர் என்று கூறினார். மேலும் ரவுடி சீசிங் ராஜா கொல்லப்படுவதற்கு முன்பாகவே அவருடைய மனைவி என் கணவரை போல என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப் போகிறார்கள் என நேற்று வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.