
திமுக சார்பில் நடந்த வாக்கு சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின், பழனிச்சாமி அவர்களே..! தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது. நான்காண்டு காலம் ஆட்சி அதிகாரம் இருப்போ மக்களுக்காக எதையும் செய்யாமல், இப்போ பதவி பறிபோன பிறகு, தன்னைப் போலவே எல்லோரும் இருப்பாங்க என்று நினைச்சிட்டாரு போல அது தான் பொய் பொய்யா சொல்லிட்டு இருக்காரு.
அவருடைய ஆட்சியில தமிழ்நாடு எல்லா துறைகளிலும் முதலிடம் பிடித்ததாம். யாரு சொல்றாரு ? பழனிச்சாமி … அவருடைய ஆட்சியில் எல்லா துறைகளிலும் முதலிடம் பிடித்ததாம். நாம கேக்குறது வேற ஒன்னும் இல்ல….. சொந்தமா விதைத்து அறுவடை பண்றது தான் பெருமை.
3 வேளான் சட்டங்களுக்கு ஆதரவாக… அதற்காக போராடின ஏழை விவசாயிகளுக்கு எதிராக பேசின போலி விவசாயி பழனிச்சாமிக்கு இதெல்லாம் எப்படி தெரியும். உண்மையிலேயே அவங்க ஆட்சியில்… தமிழ்நாட்டு நலனும்… உரிமைகளும் பாஜக கிட்ட அடகு வச்சு, காவு கொடுக்கப்பட்டுச்சு, இதுதான் அவங்க வரலாறு.
போதைப் பொருளான குக்காவிற்கு லஞ்சம் வாங்கியதற்காக ஒரு அமைச்சர் வீட்டுக்கு ரெய்டு வந்த வரலாறு மறந்து விட முடியுமா ? சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் மரணம் இன்னும் ஆறாத வடுவாக இருக்கு. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்திலே காக்கை, குருவிகளை சுடுவது போல 13 பேரை சுட்டு கொன்னாங்களே… அப்ப என்ன சொன்னாரு ? டிவியை பார்த்து தான் தெரிஞ்சுகிட்டேன்னு சொன்னாரு இந்த பழனிச்சாமி… ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு விசாரணை நடத்திய நீதி அரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்துல உங்க முகத்திரையை கிழிச்சிட்டாங்க என பேசினார்.