குஜராத் மாநிலத்திலுள்ள சூரத் பகுதியில் நான்கு பேர் ஆன்லைன் ஆடை விற்பனையகம் என்ற பெயரில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்துள்ளனர். இந்த கடையில் சட்டவிரோதமாக கள்ள நோட்டுகள் அச்சடித்து வந்துள்ளனர். இந்நிலையில் அகமதாபாத் பகுதியில் இரண்டு நபர்களால் வியாபாரி ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார். அந்த வியாபாரி கள்ள நோட்டுகளை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பதிவிட்டுள்ளார். இதன் மூலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரகசியமான முறையில் அந்த மூன்று நபர்களை கையும் களவுமாக பிடித்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 1.60 கோடி உயர்ரக கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறியதாவது, இந்த கள்ள நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படத்திற்கு பதிலாக பாலிவுட் நடிகரான அனுபம் கெர் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த நோட்டுகளில் “ரிசர்வ் வங்கி” என்பதற்கு பதிலாக “ரிஷோல் வங்கி” என அச்சிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் ஹிந்தி வெப் சீரிஸ் “ஃபார்சி” என்ற தொடர்பானியில் கள்ள நோட்டுகளை அச்சடித்து விற்பனை செய்துள்ளனர். என காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த வீடியோ குறித்து நடிகரான அனுபம் கெர் தனது இன்ஸ்டா பக்கத்தில் “500 ரூபாய் நோட்டுல காந்திக்கு பதிலாக நானா…? என்னெல்லாம் பண்றாங்க பாருங்க”என நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார்.