
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் பிந்து கோஷ். இவர் தனது தனித்துவமான உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்புகள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். கவுண்டமணி, செந்தில், ரஜினிகாந்த் என பல முன்னணி நடிகர்களுடனும் அவர் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த சில காலமாக கடுமையான உடல் நலக்குறைவால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் கலாட்டா யூடியூப் சேனலுக்காக பிந்து கோஷை நேர்காணல் எடுப்பதற்காக நடிகை ஷகிலா சென்றிருந்தார். அப்போது தனது உடல்நல பாதிப்புகள் மற்றும் தன்னை உறவினர்கள் கைவிட்டது என்று பல தகவலை அவர் பகிர்ந்து கொண்டார்.
தான் பெற்ற மகன் கூட தன்னை கவனிக்கவில்லை என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்தார். இந்த சூழலில் அவருக்கு உதவிசெய்ய யாரை அணுகலாம் என்று பார்வையாளர்களிடம் சகிலா கேள்வி எழுப்பினார். அதற்கு நடிகர் பாலா என்று பலரும் கூறியுள்ளனர். அதன்படி பிந்து கோஷின் நிலையை குறித்து பாலாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் பிந்துகோஷின் வீட்டிற்கு நடிகை சகிலா உடன் சென்று ரூ. 80,000 பணத்தை கொடுத்து அவரது மருத்துவ செலவையும் தானே பார்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இதற்கு நடிகை பிந்து கோஷ் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.