
பிரபல இந்தி திரைப்பட நடிகை மலைகா அரோராவின் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மன அழுத்தம், உடல்நலக்குறைவு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மலைகா அரோரா, ஹவுஸ்புல், கப்பார் சிங், தபாங் 2 உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது அவர் இந்த சோகச் சம்பவத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.