தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். இவர் கடந்த வருடம் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்நிலையில் நடிகர் ஜூனியர் என்டிஆர் ஐ பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேன் தன்னுடைய படத்தில் நடிக்க வைப்பேன் என கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த அவர் யார்.? அருமையாக இருக்கிறார். அவருடைய பெயர் என்ன.?

கடந்த வருடம் வெளிவந்த ஆர்ஆர்ஆர் மிகப்பெரிய படம். கூண்டில் இருந்து புலிகள் வர அவரும் வெளிய வர ஆகா என்ன ஒரு அருமை. ஒரு நாள் அவருடைய பணிபுரிய விருப்பம் என்று கூறினார். அதற்கு ஜூனியர் என்டிஆர்-ஐ எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பீர்கள் என தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அது பற்றி நான் யோசிக்கவில்லை சற்று காலதாமதம் ஆகும் என்று ஜேம்ஸ் கேன் கூறினார். மேலும் இதன் மூலம் ஜூனியர் என்டிஆர் விரைவில் ஹாலிவுட் சினிமாவில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.