
பிரபலமான திரைப்பட பின்னணி பாடகர் மனோ. இவர் தமிழ் உட்பட ஏராளமான மொழிகளில் பல படங்களில் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். அதோடு ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து வருகிறார். இந்நிலையில் தற்போது பாடகர் மனோகவின் மகனை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு உணவகத்திற்கு 16 வயது சிறுவன் ஒருவன் சென்றுள்ளான். இந்த சிறுவனை மனோவின் மகன் உட்பட அவருடைய நண்பர்கள் 5 பேர் கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தரப்பில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மனோவின் மகனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.