விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூரில் புகழ்பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் உண்டியல் காணிக்கை மாதம் தோறும் எண்ணப்படும். இந்நிலையில் விழுப்புரம் துணை ஆணையர் சிவலிங்கம், அறநிலை துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

அதில் 27 லட்சத்து ஆயிரத்து 917 ரூபாய் பணமும், 70 கிராம் தங்க நகைகளும், 240 கிராம் வெள்ளி பொருட்களும் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம், கண்ணன், இந்தியன் வங்கி ஊழியர்கள் ஆகியோர் உண்டியல் எண்ணும் போது உடன் இருந்தனர்.