
துபாயில் நேற்று நடைபெற்ற இந்தியா நியூசிலாந்து இறுதிப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியை 4 விக்கெட்டுகளில் வீழ்த்தி சாம்பியன்ஸ் ட்ராபி பட்டத்தை வென்றது. இந்த வெற்றியை ரசிகர்கள் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பெர்கூஷன் கல்லூரி சாலையில் ரசிகர்கள் இந்திய கொடியை அசைத்து கொண்டாடினர்.
இது வீடியோவாக சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. அதில் இளைஞர் ஒருவர் போலீஸாரால் லத்தியால் அடிக்கப்படும் காட்சி காணப்படுகிறது. இதுகுறித்து காவல் துறையினர் விளக்கமளித்துள்ளார். அதாவது இந்திய அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது இந்த இளைஞர் மது போதையில் இருந்ததாகவும், பொதுமக்களுக்கு தொந்தரவு அளித்ததால் அவரை தனியாக அழைத்து எச்சரித்ததாகவும், பின்னர் அவர் மன்னிப்பு கேட்டதால் விடுவிக்கப்பட்டதாகவும் கூறினார்.