இன்றைய காலகட்டங்களில் முதலீடு செய்பவர்கள் தங்களுடைய பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு பிபிஎஃப் திட்டம் மிக பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தில் 500 ரூபாயிலிருந்து நீங்கள் முதலீடு செய்ய முடியும்.

அதோடு இந்த திட்டத்தில் வட்டி விகிதம் 7.1 % இருப்பதால் இறுதித் தொகையும் அதிகமாகவே கிடைக்கும். அத்துடன் பழைய வரிமுறையை தேர்வு செய்திருந்தால் அதற்கான முதிர்ச்சி தொகையை நீங்கள் பெறும் போது வருமான வரி சட்டம் 80 c பிரிவின்படி வருமான வரி விலக்கையும் நீங்கள் பெற முடியும்.

இதைத் தொடர்ந்து இந்தத் திட்டத்தில் நீங்கள் ரூ. 500 முதல் ரூ 1.5லட்சம் வரை முதலீடு செய்யலாம்.இந்த முதலீட்டின்  காலம் 15 வருடங்கள் ஆகும். அதற்குப் பின்னர் நீங்கள் தேவைப்பட்டால் இரண்டு முறை ஐந்து வருடங்கள் நீட்டித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.

இந்தத் திட்டத்தில் நீங்கள் ஆதார் கார்டு, பான் கார்டு,இருப்பிட சான்றிதழ் போன்ற ஆதாரங்களை வைத்து ஆன்லைனில் அல்லது நேரடியாக வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ் சென்று முதலீடு செய்யலாம்.

இத்திட்டத்தில் நீங்கள் மாதம் 2000 ரூபாயை முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் 24 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ள பட்சத்தில் 15 வருடங்களுக்கு பின் உங்களுக்கு முதிர்ச்சி தொகையாக 6,50000ரூபாய் உங்கள் கைகளில் கிடைக்கும்.