
இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் நேற்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் ராபிப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி) உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது. ராபி பருவத்தில் பயிரிடப்படும் கோதுமை, கொண்டை கடலை, கடுகு போன்ற 6 வகையான ராபி பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசாங்கம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து 2025-2026 ஆண்டிற்கான ராபி பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு பின்வருமாறு,கோதுமைக்கான குறைந்தபட்ச விலை ரூ.150 உயர்த்தப்பட்டு, ஒரு குவிண்டால் ரூ.2,425 ஆக வழங்கப்படுகிறது. கடுகு குறைந்தபட்ச விலை உயர்வின்படி ரூபாய் 300 அதிகரித்து ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் 5,950 ஆகவும், கொண்டைக்கடலை குறைந்தபட்ச விலை உயர்வின்படி ரூபாய் 210 அதிகரித்து ரூபாய்5,650 வழங்கப்படுகிறது.
மைசூர் பருப்பு ரூபாய் 275 உயர்த்தப்பட்டு குவிண்டாலுக்கு 6,700 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. குங்குமப்பூ ரூபாய்140 உயர்த்தப்பட்டு குவிண்டாலுக்கு ரூபாய் 5,950 வழங்கப்படுகிறது. பார்லி ரூபாய் 130 உயர்த்தப்பட்டு ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் 1,980 வழங்கப்படுகிறது. இந்தக் குறைந்தபட்ச ஆதரவு விலை மூலம் விவசாயிகள் தங்களது விளை பொருள்களை லாபகரமான முறையில் விற்க முடியும். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது