
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் உள்ள கவணையில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் உடல்நல குறைவால் உயிரிழந்தார். இவருக்கு அப்பு என்ற மகன் இருக்கிறார்.
இந்நிலையில் தனது தந்தையின் சடலத்தின் முன்பு நின்று கண்ணீர் மல்க அப்பு, விஜயசாந்தி என்பவரின் கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். அதன் பின் உயிரிழந்த தந்தையின் பாதங்களைப் பிடித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிலவு அங்கிருந்த அவர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.