
கேம்பிரிட்ஜில் வசிக்கும் 38 வயதான ஸ்டுவார்ட் மற்றும் 33 வயதான கிளோ ஹாமில்டனின் குடும்ப வாழ்க்கையில் இரண்டாவது குழந்தை பிறந்த பின் ஏற்பட்ட மாற்றங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன. இதில் 2 குழந்தைகளின் பெற்றோராகும் சவால்களை சமாளிக்க முடியாமல், ஸ்டுவார்ட் தனது மன அழுத்தத்தை சமாளிக்க, வீட்டை விட்டு தோட்டத்தில் கூடாரம் அமைத்து வசிக்கத் தொடங்கினார். இது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி, பெற்றோராகும் மனநல சவால்களைப் பற்றிய விவாதத்தை தூண்டியது.
ஸ்டுவார்ட் மற்றும் கிளோ, இருவரும் இளைய பெற்றோர்கள், ஃபேபியன் எனும் 2 வயது மகனுக்கு பெற்றோராக உள்ளனர். அவர்களின் 2-வது குழந்தை பிறந்தபின், ஸ்டுவார்டின் மனநிலை மாறியதை கிளோ கவனித்தார். மேலும் தொழிலுக்கும் குடும்பத்துக்கும் இடையே சமநிலை பேண முடியாமல், ஸ்டுவார்ட் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தார். அதோடு குழந்தைகளைக் கவனித்து கொள்வதில் ஏற்படும் சிரமங்கள் அவரை குடும்பத்தை விட்டு வெளியே செல்லத் தூண்டியதாக அவர் கூறினார்.
அதோடு தோட்டத்தில் கூடாரம் அமைத்து வசிக்கத் தொடங்கிய ஸ்டுவார்ட், தனது மனநலத்தை கவனிக்கவே இந்த முடிவு கிளோவின் ஆதரவுடன் எடுக்கப்பட்டது. “ஒரு குழந்தை பிறந்தவுடன் தாயின் நலனைப் பற்றியே அனைவரும் கேட்கிறார்கள்; ஆனால் தந்தையின் நலனை யாரும் கேட்பதில்லை,” என கிளோ கூறுகிறார். இதனால், இருவருக்கும் இடையே உறவுகள் மேம்பட்டு, ஸ்டுவார்ட் மனஅழுத்தம் குறைந்து சீராக வாழ்கிறார்.
postnatal depression எனப்படும் இந்த மனநல பிரச்சனை, தாய்மார்களுக்கே உரியது எனக் கருதப்பட்டாலும், தந்தைகளும் இதற்குள்ளாகலாம். ஸ்டுவார்ட் தனது அனுபவத்தைப் பகிர்ந்து, தந்தைகளும் தங்களின் மனநலத்தை கவனிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார். பிற குழந்தையின் பிறப்பின் போது, தந்தைகளும் தேவையான ஆதரவை பெறுவது அவசியமாக உள்ளது. இதனால், தாயும் தந்தையும் சமமாக மனநலத்தை பராமரிக்க வேண்டும் என இந்த அனுபவம் பலருக்கும் ஒரு உணர்வு விழிப்பூட்டமாக செயல்படுகிறது.