2 வருட நிலையான வைப்புத் தொகைக்கு சிறந்த வட்டி விகிதங்கள் கொடுக்கக்கூடிய சில வங்கிகள் குறித்து நாம் தற்போது அறிந்துக்கொள்வோம். அதன்படி, 2 வருட முதிர்வு தேதி உடன் நிலையான வைப்புத்தொகைக்குரிய அதிக வட்டி விகிதம் DCB வங்கியால் வழங்கப்படுகிறது. வங்கி 700 நாட்கள் முதல் 24 மாதங்கள் வரையிலான முதிர்வுகால வைப்புகளுக்கு 8 சதவீத வட்டி விகிதத்தினை வழங்குகிறது. இதே கால அளவுள்ள டெபாசிட்டுகளுக்கு வயதானவர்களுக்கு வட்டி விகிதமானது 8.5 சதவீதமாக அதிகரிக்கும்.

யெஸ் வங்கியானது 18-36 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு, 6.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்தக்குடிமக்களுக்கு 18-36 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்குரிய வட்டி விகிதம் 8.25% ஆக  இருக்கும். IDFC First Bank 2 வருடங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 7.75% வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.

18 மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரையுள்ள FD-களுக்கு, தனியார் வங்கியானது 7.75% வட்டி விகிதத்தினை வழங்குகிறது. மூத்தக்குடிமக்களுக்கு 18 மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரை முதிர்ச்சி அடையும் நிலையான வைப்புகளுக்கு வட்டி விகிதம் 8.25% ஆக அதிகரிக்கும். Induslnd வங்கி 2 வருடங்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 7.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்தக்குடிமக்கள் 2 வருடங்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 8.25% வட்டி விகிதத்தை பெறலாம்.