செஸ் விளையாட்டில் மிக இளம் வயதிலேயே #FIDE”Women Candidate Master” என்ற பட்டத்தை  அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த சர்வாணிகா பெற்றுள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நான்கு  வயதிலிருந்தே செஸ் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று வரும் சர்வாணிகா, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் பயனாளி என்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.