டெல்லி பாவனா பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தீபாவளியை முன்னிட்டு தொழிற்சாலையை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது தொழிற்சாலையின் மற்றொரு பகுதியில் அஸ்லம் என்பவர் சுற்றி திரிந்தபடி இருந்துள்ளார். இந்நிலையில் ஆலையின் 4-வது மாடியில் இருந்தபடி பிரகாஷ் அலங்காரப் பணியை செய்து கொண்டிருந்த போது அவரிடம் சென்ற அஸ்லம் சாப்பிட 2 ரொட்டி துண்டுகள் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு பிரகாஷ் மறுப்பு தெரிவித்ததோடு சொந்த பணத்தில் ரொட்டிகளை வாங்கும் படி அஸ்லாமிடம் கூறியுள்ளார்.

இதனால் அஸ்லாமுக்கும் பிரகாஷ் இருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதோடு அஸ்லாம் பிரகாஷை கடுமையாக திட்டியுள்ளார். இதனை அடுத்து கட்டிடத்தின் முன் பகுதிக்கு இருவரும் வந்துள்ளனர். அப்போது அஸ்லம், பிரகாஷை 4-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டுள்ளார். இதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் அஸ்லம் அங்கிருந்து தப்பியோடி விட்டார். எனினும் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்