ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மூதூர் திரௌபதி அம்மன் கோவில் தெருவில் சிவவாதம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த  24-ஆம் தேதி தனது ஆட்டோவையும், சொந்த உபயோகத்திற்காக வாங்கிய டாட்டா சுமோவையும் வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் இரவு 11 மணிக்கு ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவபாதம் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆட்டோ மற்றும் டாட்டா சுமோவில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஆட்டோவில் பெட்ரோல் குண்டு வீசியதற்கான ஒரு பாட்டிலை கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆட்டோவிற்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.