
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காசிபாளையம் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், 2 ஆண் குழந்தைகளும் இருந்துள்ளனர். நேற்று காலை கணவன் மனைவி இருவரும் விவசாய வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் மூன்று குழந்தைகளும் வீட்டில் விளையாடி கொண்டிருந்தனர். இதனையடுத்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ராஜா சிவா என்ற 2 வயது ஆண் குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் தனது குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த இடத்திற்கு சென்று அங்குள்ள கிணற்றில் குதித்து தேடி பார்த்தார்.
ஆனாலும் குழந்தையை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சேற்றில் சிக்கி இருந்த குழந்தையின் உடலை மீட்டனர். பின்னர் குழந்தையின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், கிணற்றுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.