
சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் கடப்பேரி தாமஸ் தெருவில் 18 குடியிருப்புகள் உடைய அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த குடியிருப்புகளுக்கு மின் வினியோகம் செய்வதற்காக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை பயங்கர சத்தத்துடன் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்து 2 மோட்டார் சைக்கிள்கள் மீது பரவியது.
சிறிது நேரத்தில் குடியிருப்புகளில் பொருத்தப்பட்டிருந்த ஏசி எந்திரங்களில் தீப்பிடித்து வெடித்து சிதறியதால் அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு ஓடி வந்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.