
சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 4-வது குறுக்கு தியேட்டரில் பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான பாலிதீன் பைகள் குடோன் அமைந்துள்ளது. அதன் அருகிலேயே ஜாகிர் என்பவருக்கு சொந்தமான துடைப்பம் குடோனும், சில்வர் பாத்திரம் தயாரிக்கும் கம்பெனிகளும் இயங்கி வருகிறது. நேற்று மதியம் பாலிதீன் பைகள் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதால் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குடோனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் பாலிதீன் பைகள் மற்றும் துடைப்பம் குடோன்கள் எரிந்து நாசமானது. அதன் சேத மதிப்பு 50 லட்ச ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.