விருதுநகர் மாவட்டத்தில் அதிகமானோர் பட்டாசு, தீப்பெட்டி போன்ற தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயங்களில் வியாபாரம் சூடு பிடிக்கும். தமிழ்நாட்டில் 90% பட்டாசுகள் விருதுநகர், சிவகாசி பகுதிகளிலேயே உற்பத்தி ஆகிறது. வருடந்தோறும் குறிப்பிட்ட பணியாளர்கள் இந்த வெடி விபத்தில் சிக்கி இறக்கின்றனர். தற்போது நடப்பு ஆண்டில் 52 பேர் இறந்துள்ளதாக தொழிலாக பாதுகாப்பு இயக்குனர் ஆனந்த் கூறியுள்ளார்.

இச்செய்தி குறித்து பாதுகாப்பு இயக்குனர் ஆனந்த் கூறியதாவது, சென்ற ஆண்டு தமிழ்நாட்டில் 27 பட்டாசு விபத்துக்கள் நடந்தன. இதில் விருதுநகரில் மட்டும் 15 விபத்துக்கள் நடந்துள்ளன. இத்தொடர்ந்து 2024 இல் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்துகளில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 42 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு பாதுகாப்பு இயக்குனர் ஆனந்த் கூறினார்.