
ஹரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் அமித் பதானா என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டப் படிப்பை முடித்த நிலையில் வங்கியில் நிலையான பதவியை பெற்றிருந்தார். வாகனங்கள் மீது அவருக்கு இருந்த காதலால் வங்கி வேலையை விட்டுவிட்டு சொகுசு காரான ஆடி மூலம் பால் விநியோகிக்கத் தொடங்கி உள்ளார்.
கார்ப்பரேட் வாழ்க்கை தனது ஆர்வமான வாகனக் காதலைத் தடுக்கின்றது என உணர்ந்த அவர் தனது குடும்பத்தின் பால் வியாபாரத்துடன் தனது வாகன ஆர்வத்தை இணைக்க முடிவு செய்து, முதலில் ஹார்லி-டேவிட்சன் பைக்கில் பால் விநியோகிக்கத் தொடங்கினார்.
இதைத் தொடர்ந்து அமித் பதானாவின் பால் வணிகம் விரைவாக வளர்ச்சி பெற்றது. வாடிக்கையாளர் அளவு அதிகரித்தவுடன், அவர் தனது போக்குவரத்து முறையையும் மேம்படுத்தினார். இன்று, அவர் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள ஆடி காரில் தனது வாடிக்கையாளர்களுக்கு பால் விநியோகிக்கிறார். சமூக ஊடகங்களில் ‘ஹார்லி வாலா துதியா’ என அழைக்கப்படும் அவர், பைக்கில் பால் விநியோகிக்கும் வீடியோவால் பரவலாக புகழ் பெற்றார். அமித் பதானாவின் இந்த தனித்துவமான பயணம், பல உள்ளூர்வாசிகளை ஈர்த்துள்ளது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
பல ஆண்டுகளாக அவரிடம் பால் வாங்கும் வாடிக்கையாளர்களும், அவரது வளர்ச்சியை பெருமையுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். முன்பு லட்சக்கணக்கில் மதிக்கக்கூடிய பைக்கில் பால் வழங்கிய அவர், இன்று கோடிக்கணக்கில் மதிக்கக்கூடிய ஆடி காரில் அதே பணியை ஆர்வத்துடனும், நம்பிக்கையுடனும் தொடர்கின்றார். மேலும் ஃபரிதாபாத் நகரில் அவரது ஆடம்பர பால் விநியோக சேவை தற்போது பெரும் உரையாடல் தலைப்பாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.