
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வித்யா பாலன். இவர் தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை வித்யா பாலன் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மிகவும் மோசமான அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதாவது நடிகை வித்யா பாலன் கல்லூரியில் படிக்கும்போது ஒருவரை காதலித்துள்ளார்.
அந்த நபர் காதலர் தினத்தன்று நடிகை வித்யா பாலனிடம் சென்று என்னுடைய முன்னாள் காதலியுடன் டேட்டிங் செல்ல போகிறேன் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டவுடன் வித்யாபாலன் மனமுடைந்துவிட்டார். அதன் பிறகு நாங்கள் பிரிந்து விட்டோம். தற்போது நான் வாழ்க்கையில் சிறப்பான நிலையில் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.