தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பூபாலராயர்புரம் நான்காவது தெருவில் நஜிம்கான்(42) என்பவர் வசித்து வருகிறார். மீனவரான இவர் நேற்று முன்தினம் கருப்பட்டி சொசைட்டி அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நஜிம்கானை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இதனால் படுகாயமடைந்த நிஜம்கானை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.