
தற்போது உள்ள மக்கள் வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதை நாகரீகமாக கருதுகின்றனர். அதில் தேவைக்கு அதிகமாக இருக்கும் பணத்தை பிக்சட் டெபாசிட் திட்டத்தில் போட்டால் வேகமாக பணம் சேரும் என்ற எண்ணத்தில் பலரும் தங்களது வங்கிகளில் இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாது இந்த திட்டம் மிகவும் பாதுகாப்பானது. இதில் முதலீடு இத்திட்டத்தில் மக்கள் அதிகளவு முதலீடு செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் 444 நாட்களுக்கு 7.45 % வட்டியும் 1 வருட பிக்சட் டெபாசிட் முதலீட்டிற்கு 6.85 % வட்டியும், 3 ஆண்டுகளுக்கு 6.75% வட்டியும், 5 ஆண்டுகளுக்கு 6.50 % வட்டியும் வழங்கப்படுகின்றது. மேலும் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 333 நாட்களுக்கு 7.40% வட்டியும், 1 வருடத்திற்கு 6.80 % வட்டியும், 3 ஆண்டுகளுக்கு 6.70% வட்டியும், 5 ஆண்டுகளுக்கு 6.50 % வட்டி விகிதமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பேங்க் ஆப் பரோடாவில் 399 நாட்களுக்கு 7. 30 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதில் மழைக்கால தமாக்கா திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது.
1 வருடத்திற்கு 6. 85 % வட்டியும், 3 ஆண்டுகளுக்கு 7. 15 % வட்டியும் 5 ஆண்டுகளுக்கு 6.5% வட்டியும் தரப்படுகின்றது. இதில் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 4.75 % முதல் 7.80 % வரை இருக்கும். இந்த விகிதங்கள் செப்டம்பர் 5 2024 முதல் அமலுக்கு வந்துள்ளனர். மேலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 444 நாட்களுக்கு பிக்சட் டெபாசிட் கணக்கில் முதலீடு செய்தால் 7. 30 சதவீத வட்டி தருகின்றது. அதோடு ஒரு வருடத்திற்கு 7.10 % 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கு 6.50 % வட்டியும் வழங்குகின்றது. பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் 666 நாட்களுக்கு 7. 30 % வட்டி விகிதமும், 3 ஆண்டுகளுக்கு 6.30 %, 5 வருடத்திற்கு 6 சதவீத வட்டியும் வழங்குகின்றது. இதுபோன்று அதிக லாபம் தரும் வங்கி எது என்பதை தேர்வு செய்து முதலீடு செய்வது மிகவும் முக்கியமானதாகும்.