அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்த நிலையில் தற்போது அதிமுக கூட்டணியில் முதல் கட்சியாக ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகம் இணைந்துள்ளது. அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் திமுக அதே கூட்டணியுடன் களம் காணும் நிலையில் அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது.

அடுத்து வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றால் அதிமுக மற்றும் பாஜக இணைந்து ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா கூறியுள்ளார். இந்நிலையில் இப்போது ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் நாகராஜன் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என்று கூறியுள்ளார். மேலும் அதியமான் தலைமையிலான ஆதித்தமிழர் கட்சி திமுக பக்கம் இருக்கும் நிலையில் இவர் அதிமுக பக்கம் சாய்ந்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.