திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில், அதற்கேற்ப களப்பணிகள் அமைந்திட கட்சிப் பொறுப்புகளில் மாற்றங்களும், நியமனங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் சில அறிவிப்புகளும் வெளியாகும்.

முன்பு பொறுப்பில் இருந்தவர்கள் தற்போது நியமிக்கப்பட்டவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கடமையாற்ற வேண்டும். புதிதாகப் பொறுப்புக்கு வந்திருப்பவர்கள், ஏற்கனவே பொறுப்பில் உள்ளவர்களை அரவணைத்து, எல்லாரையும் ஒருங்கிணைத்துச் செயலாற்றிட வேண்டும்

தமிழ்நாட்டு மக்கள் மனதில், குறிப்பாகப் பெண்கள் – இளைஞர்கள் ஆகியோரிடம் செல்வாக்குப் பெற்றுள்ள திமுகவும், அதன் கொள்கைக் கூட்டணியினரான தோழமைக் கட்சியினரும் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி முத்திரை பதிப்பதைத் தடுக்க முடியாது என்பது அரசியல் எதிரிகளுக்கும் நன்றாகத் தெரியும்.

அதனால்தான் கள்ளக்கூட்டணி, திரைமறைவுக் கூட்டணி, வாக்கைச் சிதறடிக்க நினைக்கும் கூட்டணி என நம்மை எதிர்ப்பவர்கள் எத்தனை ‘கெட்டப்’ போட்டு வந்தாலும் களம் நமதே. மக்களின் ஆதரவு நம் பக்கமே. மக்களுக்குத் துணையாக நிற்போம். கவனமாக உழைப்போம். வெற்றி நமதே என கூறியுள்ளார்.