
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அரசியலில் முனைப்போடு ஈடுபட்டுள்ளார். அவர் பொதுமக்கள் மற்றும் பெண்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இன்று ஆளுநர் ஆர்.என் ரவியை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேரில் சென்று சந்திக்கப் போவதாக தகவல் வெளியானது.
தற்போது ஆளுநரை சந்தித்த விஜய் அவருக்கு திருக்குறள் புத்தகத்தை வழங்கியுள்ளார். மேலும் காலவரிசையில் பாரதியார் படைப்புகள் என்ற தொகுப்பு நூலையும் விஜய் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.