
தமிழக அரசின் சமீபத்திய அறிவிப்பின்படி, கோயில்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் கருணைத் தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் வெளியிட்டார். இதனுடன், கிராம கோயில் பூசாரிகள் மற்றும் ஆதிதிராவிட கோயில் அர்ச்சகர்களுக்காக தனியாகும் நலத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அரசு தரப்பில் அறிவிக்கபட்ட மற்றொரு முக்கிய திட்டம், கிராமப்புற கோயில்களில் பணியாற்றும் 10,000 பூசாரிகள் மற்றும் அர்ச்சகர்கள் பைக் வாங்குவதற்காக ரூ.12,000-வரை மானியம் வழங்கப்பட உள்ளதாகும்.
இது, பல்லாயிரக்கணக்கான பூசாரிகள் பயனடைவதற்கான திட்டமாகும். இந்த நடவடிக்கைகள், தமிழகத்தில் கோயில் நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு தரப்பினருக்கும் நலனளிக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.