கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி கடந்த 5-ம் தேதி பூப்பெய்தினார். இந்நிலையில் மாணவியின் கடந்த 7-ம் தேதி ஆண்டின் இறுதி தேர்வை எழுதுவதற்காக பள்ளிக்கு சென்றார்.

அப்போது வகுப்பறையின் கதவை பூட்டிவிட்டு வெளியே அமர வைத்து அந்த மாணவியை தேர்வு எழுத வைத்தனர். இதனை அந்த மாணவியின் தாய் செல்போனில் வீடியோவாக எடுத்த நிலையில் இணையதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.

தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக்கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை. நாங்கள் இருக்கிறோம். இருப்போம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.