தென்னிந்திய நடிகர் சங்கம் தற்போது திரைத்துறையில் பணியாற்ற 5 வருடங்கள் தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. அதாவது பாலியல் புகாரில் குற்றம் சுமத்தப்பட்ட நடிகர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த நடிகர்களுக்கு சினிமா துறையில் பணியாற்ற 5 வருடங்கள் தடை விதிக்கப்படும். பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்ட ரீதியான உதவிகளை பாதுகாப்பு கமிட்டி வழங்கும்.

பாதிக்கப்பட்டவர்கள் கமிட்டியிடம் புகார் கொடுக்கலாம். அவர்கள் ஊடகங்களில் பேச வேண்டாம். பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்கும் கமிட்டியின் நடவடிக்கைகளை நடிகர் சங்கம் கண்காணிக்கும் என்று ‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத் திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.