வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் இன்று அல்லது நாளை காலை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. தமிழக த்தின் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்ப்பதால் 11 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தமிழக அரசு மக்களுக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சிறப்பாக செய்து வருகிறது. இந்த நிலையில் புயல் கரையை கடந்தாலும் மழை நீர் ஆங்காங்கே தேங்கி இருக்கும் எனவும் பள்ளிகள் சேதமடைய வாய்ப்பு உள்ளது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

எனவே பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை உட்பட தமிழகத்தில் மழை மற்றும் புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகள் அனைத்தும் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் அளவிற்கு சீரமைத்த பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று முதலமைச்சர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார் என கூறியுள்ளார்.