திருமணம் செய்பவர்கள் பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்று திருமணத்தை பதிவு செய்வார்கள். ஆனால் தற்போது ஒரு புதிய திட்டத்தை கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக திருமணம் செய்தவர்கள் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் திருமணத்தை பதிவு செய்ய முடியும். திருமணத்திற்கான பதிவு கட்டணத்தையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்திக் கொள்ளலாம்.

திருமணத்திற்கான ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக சான்றிதழ் வழங்கப்படும் எனவும், இந்த திட்டம் முதலில் தமிழ்நாடு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்பவர்களுக்கு பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் பதிவாளர் அலுவலகங்களில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முடியும். பத்திரபதிவு அலுவலகத்தில் இருக்கும் தற்போதைய சாப்ட்வேர் ஸ்டார்-3 ஆக மேம்படுத்தப்பட உள்ளது. புதிய சாப்ட்வேரில் இனிவரும் திருமண பதிவுகளை பொதுமக்களே மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.