
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கும் நிலையில் காலை முதலே தொண்டர்கள் குவிய ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த தொண்டர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்துவிட்டார்.
இன்று மாலை 6:00 மணி அளவில் நடிகர் விஜய் மாநாட்டில் உரையாற்றும் நிலையில் காலை 6:00 மணி முதலே வெயிலில் தொண்டர்கள் காத்திருக்கிறார்கள். மேலும் அதிக வெயில் காரணமாக தொண்டர் மயங்கி விழுந்ததாக கூறப்படும் நிலையில் அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அதிக வெயில் காரணமாக மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அதிக வெயில் காரணமாக தொண்டர்கள் மயங்கி விழுந்து வரும் நிலையில் ஒருங்கிணைப்பு குழுவின் மீது நடிகர் விஜய் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது கேரவனில் இருக்கும் விஜய் இதனை கவனித்து வரும் நிலையில் குடிநீர் வசதி போன்றவைகள் முறையாக செய்யப்படவில்லையா என்று கடும் கோபத்தை வெளிப்படுத்தியதோடு சரியாக திட்டமிடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.