
விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு விக்ரவாண்டியில் விமர்சையாக நடந்து முடிந்தது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் போட்டியிட உள்ளது. விஜயின் அரசியல் பயணம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் விஜய் மக்களுக்கு செய்து வருகிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் அழைத்து நிவாரணம் வழங்கினார்.
மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் முதலாமாண்டு நிறைவுக்கு பிப்ரவரி 2ஆம் தேதிக்கு முன்னதாக மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் நலப் பணிகளை தீவிரபடுத்தவும் கட்சியினருக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.