
இந்தியாவில் தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் வழங்குவதில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருப்பதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் வழங்குதல் மற்றும் உற்பத்தி செய்தல் போன்றவற்றில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் நிலையில் இரண்டாம் இடத்தில் மகராஷ்டிராவும், மூன்றாம் இடத்தில் குஜராத் மாநிலமும் இருக்கிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேரார்வம் கொண்டுள்ளார். இதனால் வெளிநாடு முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டில் புதிதாக தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கும் பணிகள் நடைபெறுகிறது. மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை இதோ,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களின் திராவிட மாடல் ஆட்சி அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதில் இந்தியாவில் முதலிடம்!
மனித வளங்களை வளர்ப்பதில் (Mandays) மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களை விட தமிழ்நாடு மாபெரும் சாதனை!#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | pic.twitter.com/Y3n3dhP7sB
— TN DIPR (@TNDIPRNEWS) January 6, 2025