
பிரபல நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதைத்தொடர்ந்து நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா காதலித்த நிலையில் இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்தது. இந்நிலையில் தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்துக்கு கேடி ராமராவ் தான் காரணம் என்று குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தார்.
இது சர்ச்சையாக மாறிய நிலையில் நடிகர் நாகார்ஜுனா தேவையில்லாமல் என்னுடைய குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டாம் எனவும் உடனடியாக இந்த விஷயத்தை வாபஸ் பெற வேண்டும் எனவும் எச்சரித்தார். அதோடு நடிகை சமந்தா நாங்கள் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்றதாகவும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி கருத்து சொல்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை எனவும் தேவை இல்லாமல் என்னை அரசியலுக்குள் இழுக்காதீர்கள் என்றும் அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அதோடு ஒரு அமைச்சராக இருப்பவர் பொறுப்புடன் பேச வேண்டும் எனவும் கூறினார்.
இதேபோன்று நடிகர் நாகை சைதன்யாவும் தானும் தன்னுடைய முன்னாள் மனைவியும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்ற நிலையில் உங்களுடைய அரசியல் வாழ்க்கைக்கு நடிகர்களின் வாழ்க்கையை தேவையில்லாமல் இழுக்காதீர்கள் என்று கூறி இருந்தார். அதன்பிறகு கேடி ராமராவ் நான் நாகசைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்துக்கு காரணம் இல்லை எனவும் அமைச்சர் இந்த விவகாரத்திற்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் தற்போது அமைச்சர் கொண்டா சுரேகா தான் பேசிய கருத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, என்னுடைய நோக்கம் ஒரு தலைவர் பெண்களை இழிவுபடுத்துவதே கேட்பதே தவிர உணர்வுகளை புண்படுத்துவது கிடையாது என்று கூறினார். மேலும் நடிகை சமந்தாவிடம் நீங்கள் தன்னம்பிக்கையுடன் வளர்ந்த விதம் தனக்கு ஒரு உதாரணம் எனவும் தன்னுடைய கருத்துக்களை நிபந்தனை இன்றி வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார். நடிகை சமந்தா கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது அமைச்சர் சமந்தா விடம் மன்னிப்பு கேட்டுள்ளது தெலுங்கு திரை உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.