
சென்னை மாவட்டம் கிண்டியில் உள்ள ஐடிசி கிரான்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறு சீரமைப்புக்கான கூட்டுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகா துணை முதல்வர் கே.டி சிவக்குமார், பஞ்சாப் முதல்வர் பகவான் உள்ளிட்ட ஏழு மாநில நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் காணொளி மூலமாக கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பேசினார். அவர் கூறியதாவது, நாட்டின் வளர்ச்சிக்காக நாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ளோம். மக்கள் தொகையை நாம் கட்டுப்படுத்தி இருக்காவிட்டால் மிகவும் பெருகி வளர்ச்சி பாதித்திருக்கும். மக்கள் தொகையை கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றிய மாநிலங்களை தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தண்டிக்க கூடாது. அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைந்து ஆலோசித்த பிறகு ஒன்றிய அரசு தொகுதி மறுசீரமைப்பை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.