
சட்டப்பேரவையில் இன்று மக்கள் பிரச்சனை பற்றி பேச வாய்ப்பு தரவில்லை என கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆளும் கட்சிக்கு ஒரு நீதி. எதிர்க் கட்சிக்கு ஒரு நீதியா என அதிமுகவினர் முழக்கம் எழுப்பி உள்ளனர்.
இந்த நிலையில் நீட் விவகாரம் தொடர்பாக நாளை நடக்க உள்ள அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.