
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர ஏதுவாக 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 11,176 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாடப்படும் நிலையில் அக்டோபர் 28 முதல் 30-ஆம் தேதி வரை வழக்கமான பேருந்துகளுடன் சேர்ந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். இந்த சிறப்பு பேருந்துகளில் 3 நாட்களில் 5.83 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அரசு தனியார் பேருந்துகளையும் கூடுதலாக இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஒரு புது தகவல் வெளிவந்துள்ளது.