
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று நான்கு வருடங்கள் ஆகும் நிலையில் இன்று 2025 ஆம் ஆண்டுக்கான கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள நிலையில் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முக்கிய அறிவிப்புகள் வெளியானது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள். ததும்பி வழியும் தமிழ் பெருமிதம். இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர்தொழில்நுட்பம். தமிழ்நாடெங்கும் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் தொழிற்பூங்காக்கள், புதிய நகரம், புதிய விமான நிலையம், புதிய நீர்த்தேக்கம், அதிவேக ரயில் சேவை என நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிடும் முன்முயற்சிகள்.
விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் தாயுமானவரின் கரங்கள் என அனைவருக்குமான திட்டங்கள் பல இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. ‘எல்லோர்க்கும் எல்லாம்’ எனும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது #TNBudget2025! மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நிதித்துறை அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
👩 மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள்
💪 ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம்
👩💻 இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர்தொழில்நுட்பம்
🏭 தமிழ்நாடெங்கும் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் தொழிற்பூங்காக்கள்
🏙️ புதிய நகரம்
🛫 புதிய விமான நிலையம்
💧 புதிய நீர்த்தேக்கம்
🚆 அதிவேக ரயில்… pic.twitter.com/ViQg6AdEmJ— M.K.Stalin (@mkstalin) March 14, 2025