இஸ்ரேல் மற்றும் காசா இடையே கடந்த ஒரு வருடமாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட நிலையில் அடுத்ததாக லெபனான் மற்றும் ஏமன் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள்.

இந்நிலையில் இஸ்ரேலுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்குவதற்கு கண்டனம் தெரிவித்து தற்போது சென்னையில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி மற்றும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் திடீரென சென்னை துறைமுகத்தை முற்றுகையிட முயன்றனர். இதன் காரணமாக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி மற்றும் தியாகு ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.