
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மாநில சுயாட்சியை மீட்டெடுக்கும் வகையில் புதிய முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்திருந்தார். அந்த வகையில் இன்று சட்டசபை கூட்டத்தொடரின் போது அவர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி மாநில சுயாட்சியை உறுதி செய்ய ஒன்றிய- மாநில அரசுகளின் உறவு குறித்து விரிவாக ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சூரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

அதன் பிறகு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அசோக்வர்தன் ரெட்டி, திட்டக்குழு முன்னால் தலைவர் நாகநாதன் ஆகியோர் இந்த குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள். அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்குள் இடைக்கால அறிக்கை, 2 ஆண்டுகளில் அரசுக்கு இறுதி அறிக்கையும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் சேர்க்க வேண்டியது இன்றியமையாதது என்றும் நீட் தேர்வை கண்டிப்பாக ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.