நாட்டில் சமீப காலமாக ரயில் விபத்துக்கள் நடந்து வரும் நிலையில் அது குறித்தான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் இன்று காலை மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது

. அதன்படி விரைவு ரயில் 2 பெட்டிகள் அதிகாலை நேரத்தில் தடம் புரண்டு தண்டவாளத்தை விட்டு இறங்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. அதாவது ஜபல்பூர் ரயில்வே ‌ நிலையம் அருகில் வந்ததால் ரயில் மெதுவாக சென்றது. இதன் காரணமாகத்தான் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பயணிகள் உயிர்த்தப்பினர். மேலும் இந்த ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.