
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று விக்கிரவாண்டியில் நடைபெறும் முதல் மாநாட்டுக்கான தேதியை காலை 11 மணியளவில் அறிவிக்கிறார். நடிகர் விஜய் தேதியை அறிவித்த பிறகு தமிழகம் முழுவதும் தவெக நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும் என புஸ்ஸி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதார். இந்நிலையில் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் கட்சி ஆரம்பித்த நிலையில் தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்திருந்தார்.
தற்போது அவர் கட்சி தொடங்கி 6 மாதங்கள் ஆகிவிட்டதால் அவருடைய கட்சிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மத்தியில் மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் விக்கிரவாண்யில் நடைபெறும் முதல் மாநாடு மற்றும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்தது ஆகியவற்றை தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் நிர்வாகிகள் சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும் என கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது..