தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக வெற்றி கழகத்தின் சட்ட பூர்வ பதிவுக்காக இதுவரை காத்திருந்த நிலையில் தற்போது அது நடந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தெருந்த நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் கட்சிக்கு அதிகார பூர்வ அங்கீகாரம் கொடுத்துள்ளது. நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்தை பதிவு செய்து தேர்தல் அரசியலில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக பங்கு பெற அனுமதி வழங்கியுள்ளது.

இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். திசைகளை வெல்லப்போவதற்கான முன்னறிவிப்பாக தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி முதல் கதவை திறந்துள்ளது. மேலும் முதல் மாநாடு நடைபெறுவதற்கான ஆயத்த பணிகள் தற்போது நடைபெற்று வருவதால் நிர்வாகிகள் அனைவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும். தடைகளை தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கான தலையாய அரசியல் கட்சியாக வலம் வருவோம். வெற்றிக் கொடி ஏந்தி மக்களை சந்திப்போம். வாகை சூடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.