
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார் தற்போது வெளிநாடுகளில் நடைபெறும் கார் ரேசில் கலந்து கொண்டு வருகிறார். இவர் ஏற்கனவே 2 முறை கார் விபத்தில் சிக்கிய நிலையில் தற்போது மீண்டும் கார் விபத்தில் சிக்கியுள்ளார்.
அதாவது சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்சலின் முகெல்லா கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டார். இதில் அவருடைய அணி மூன்றாம் இடத்தை பிடித்த அசத்திய நிலையில் பின்னர் ஜிடி 4 யூரோப்பியன் சீரிஸீ கார் பந்தயத்தில் கலந்து கொண்டார்.
இந்த போட்டியின் போது நடிகர் அஜித்தின் கார் விபத்தில் சிக்கிய நிலையில் நல்வாய்ப்பாக சிறு காயத்துடன் அவர் உயிர் தப்பினார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.