ஓமன் கடல் பகுதியில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. “பிரெஸ்டீஜ் பால்கன்” என்ற எண்ணெய் டேங்கர் கடலில் தலைகீழாக மூழ்கியது கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த கப்பலில் பயணம் செய்த 13 இந்தியர்களும், மூன்று இலங்கையை சேர்ந்தவர்களும் ஆவார்கள் என்று ஓமான் கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்தது. இந்நிலையில்  ஓமன் கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பலில் பயணித்த எட்டு இந்தியர்கள் உட்பட 9 பேர் மீட்கப்பட்டுள்ளார்கள்.

கப்பலில் 13 மாலுமிகள் சென்ற நிலையில் எஞ்சி உள்ளவரை நீக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக துபாயிலிருந்து ஏமனின் ஏடன் துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த கொமாரஸ் நாட்டுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் கடலில் கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.