தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் குறிப்பிட்ட அளவு மட்டுமே மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மண்ணெண்ணெய் வாங்கும் 30 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளில் சமையல் கேஸ் இணைப்பு இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. கேஸ் இணைப்பு இல்லாதவர்களுக்கு மட்டுமே மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மண்ணெண்ணெய் வழங்கும் அளவை குறைக்க மத்திய அரசு சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளதாக கூறுவதால் இந்த ஆய்வு தமிழகத்தில் நடக்க உள்ளது.